×

தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு; தம்பதிக்கு போலீசார் வலை

 

தொண்டி,மே 3: தொண்டி அருகே நம்புதாளை கண்மாய் கரை குடியிருப்பை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி சுப்புலெட்சுமி(45). இவர்களது மகன் வல்மீகநாதன்(23). இவரது காதலுக்கு சுப்புலெட்சுமி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளார். பலத்த காயத்துடன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சுப்புலெட்சுமி இறந்தார்.

மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மிரட்டுவதற்காக தீ வைத்துக் கொண்டதில், சுப்புலெட்சுமி உயிர் இழந்ததாக தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் சுப்புலெட்சுமி சிகிச்சையில் இருக்கும் போது ராமநாதபுரம் நீதிபதியிடம் கொடுத்த வாக்கு மூலத்தில், தனது மகன் காதலிப்பதாக கூறிய சிறுமியின் பெற்றோர்கள் என்னை அடித்து அவமானப்படுத்தினர். இதனால் தான் தற்கொலைக்கு முயன்றேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து இந்த வழக்கை தற்கொலைக்கு தூண்டியதாக மாற்றி, சிறுமியின் பெற்றோர் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

The post தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு; தம்பதிக்கு போலீசார் வலை appeared first on Dinakaran.

Tags : Thondi ,Krishnamurthy ,Subbuletsumi ,Nambuthalai Kanmai Karai ,Valmeekanathan ,
× RELATED அரசு பள்ளியில் அத்துமீறுபவர்களை போலீசார் தடுக்க கோரிக்கை