×

மதுரை நகர் பகுதியில் கஞ்சா விற்ற ஆறு பேர் கைது

மதுரை, மே 3: மதுரை நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை, கரிமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கரிமேடு எஸ்.ஐ தண்டீஸ்வரன் தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில் ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்தோர் சிக்கினர். அவர்கள் மதுரை, புது ஜெயில் ரோட்டைச் சேர்ந்த மாறன் (54), ஆனந்த் (28), சிம்மக்கல்லைச் சேர்ந்த நந்தகுமார் (29), சமயநல்லூரைச் சேர்ந்த முத்துபிரபாகரன் (29) என தெரியவந்தது.

விசாரணையில், அவர்கள் 4 பேரும் தேனி மாவட்டம், தேவாரத்தைச் சேர்ந்த செல்வம் மற்றும் ராஜா ஆகியோரிடம் இரண்டரை கிலோ கஞ்சாவை வாங்கி வந்து, அவற்றில் 250 கிராம் கஞ்சாவை விற்பனை செய்துவிட்டு, மீதியை கையில் வைத்திருப்பதாக கூறினர். அவர்களை, கைது செய்த போலீசார் கஞ்சா, ஆட்டோ, இரண்டு டூவீலர்கள் மற்றும் நான்கு செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

அவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த செல்வம் மற்றும் ராஜாவை தேடி வருகின்றனர். இதேபோல், ஐராவதநல்லூரில் கஞ்சா விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்ட, அதே பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் (20), சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சேர்ந்த அஜித்குமார் (25) ஆகியோரை தெப்பக்குளம் போலீசார் கைது செய்தனர்.

The post மதுரை நகர் பகுதியில் கஞ்சா விற்ற ஆறு பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai Nagar ,Madurai ,Karimedu, Madurai ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 7 இடங்களில் 100 டிகிரி...