- தாக்குதல்
- எஸ்ஐ
- மதுரை
- சுப்பிரமணியபுரம் காவல் நிலைய எஸ்.ஐ
- குமரேசன்
- ஏட்டு பாலசுப்ரமணியன்
- பழங்காநத்தம் தனியார் மருத்துவமனை
- அழகப்பன் நகர்
- தின மலர்
மதுரை, மே 3: மதுரை, சுப்ரமணியபுரம் காவல் நிலைய எஸ்ஐ குமரேசன், ஏட்டு பாலசுப்ரமணியன் ஆகியோர் பழங்காநத்தம் தனியார் மருத்துவமனை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மது போதையில் அதிவேகமாக டூவீலரை ஓட்டி வந்த அழகப்பன் நகர் பகுதியை சேர்ந்த தங்கபாண்டி (28) என்பவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது தங்கபாண்டியின் செல்போனை வாங்கி வைத்து கொண்டு, காவல் நிலையம் அழைத்துச்செல்ல முயன்றனர். அப்போது, எஸ்.ஐ குமரேசனை அவதூறாக பேசிய தங்கபாண்டி தனது தலையால் எஸ்.ஐயை முட்டி கீழே தள்ளிவிட்டார். அதில், காயமடைந்த எஸ்.ஐ குமரேசன் சுயநினைவை இழந்து மயங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த ஏட்டு பாலசுப்ரமணியன், அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
இந்த சம்பவம் குறித்து ஏட்டு அளித்த புகாரின் பேரில் சுப்ரமணியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தங்கபாண்டியை கைது செய்தனர். கைதான தங்கபாண்டிக்கு அடுத்த வாரம் திருமணம் நடைபெற உள்ளது. இந்த மகிழ்ச்சியில் நண்பருடன் சேர்ந்து அதிக அளவில் மது குடித்துவிட்டு வந்தபோது, போலீசை தாக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
The post போலீஸ் எஸ்.ஐ மீது தாக்குதல்: புதுமாப்பிள்ளை கைது appeared first on Dinakaran.