×

கொடிவேரி அணை அருகே பவானி ஆற்றில் மூழ்கி 2 பேர் பலி

 

ஈரோடு, மே 3: பவானி ஆற்றில் மூழ்கி நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த 2 பேர் பரிதாபமாக பலியாகினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள மைலாடிபுதூர், பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் மகேந்திரன் (27). இவரது மனைவி ரம்யா (24). மகேந்திரன் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மே தினத்தையொட்டி விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் பவானி ஆற்றில் குளிக்க சென்றார்.

கொடிவேரி அணை அருகே ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற மகேந்திரன் திடீரென்று தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் மகேந்திரனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு மகேந்திரன் மயக்க நிலையில் மீட்கப்பட்டார். பின்னர் உடனடியாக சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறினர்.

நம்பியூர் அடுத்துள்ள காளியம்பாளையம், ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் சென்னி. இவரது மகன் சந்தோஷ் (24). விவசாய கூலி வேலை செய்து வந்த சந்தோஷ் நேற்று தனது நண்பர்களுடன் நஞ்சை புளியம்பட்டியில் உள்ள பவானி ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீர் மூழ்கினார். பின்னர் தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 2 மணி நேரத்திற்கு பிறகு சந்தோஷ் சடலமாக மீட்கப்பட்டார். இரு சம்பவங்கள் குறித்தும் பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கொடிவேரி அணை அருகே பவானி ஆற்றில் மூழ்கி 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Bhavani river ,Kodiveri dam ,Erode ,Mahendran ,Pilliyar temple road ,Myladiputhur ,Sathyamangalam, Erode district ,Ramya ,
× RELATED பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு...