×

பூசாரியிடம் துடப்பத்தில் அடி வாங்கிய பக்தர்கள்

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே ஸ்ரீ திரௌபதி அம்மன் ஸ்ரீ தர்மராஜா கோயில் 385ம் ஆண்டு தேர் திருவிழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. விழாவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஸ்ரீதர்மராஜாவை அமர்த்தி கோயிலை சுற்றி கொண்டு வந்தனர். விழாவில் கோட்டை சண்டை நிகழ்ச்சி நடந்தது. அதில் பூசாரியிடம் சாமி ஆடியபடி சுற்றி நின்ற பக்தர்கள் தலை மீது, பழைய துடப்பத்தால் அடித்தார். பூசாரியிடம் துடப்பத்தில் அடி வாங்கி நூதன முறையில் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.

The post பூசாரியிடம் துடப்பத்தில் அடி வாங்கிய பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,385th annual Chariot Festival ,Sri Draupadi Amman ,Sri Dharmaraja Temple ,Kelamangalam ,Krishnagiri District ,Sri Draupadi Amman Sridharmaraja ,
× RELATED காரில் சென்றவரை துரத்தி பிடித்தனர்...