×
Saravana Stores

ஏப்ரல் மாதத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் 80.87 லட்சம் பேர் பயணம்: நிர்வாகம் தகவல்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: ஜனவரி மாதத்தில் மொத்தம் 84,63,384 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். பிப்ரவரி மாதத்தில் 86,15,008 பேரும் மார்ச் மாதத்தில் 86,82,457 பேரும், ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பேரும் பயணம் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக ஏப்.8ம் தேதி 3,24,055 பேர் பயணம் செய்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 33,34,498 பேர், பயண அட்டைகளை பயன்படுத்தி 33,23,602 பேர், டோக்கன்களை பயன்படுத்தி 61,976 பேர், குழு பயணச்சீட்டுமுறையை பயன்படுத்தி 4,285 பேர் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 13,63,351 பேர் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்அப் டிக்கெட், பேடிஎம் மற்றும் போன்பே போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் பேடிஎம் மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம்.

The post ஏப்ரல் மாதத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் 80.87 லட்சம் பேர் பயணம்: நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Metro ,CHENNAI ,Chennai Metro Rail Authority ,Dinakaran ,
× RELATED மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக அடையாறு...