- பிரதமர் மோடி
- Amitsha
- ஆந்திரா
- சந்திரபாபு
- பவிங்காலியன்
- திருமலை
- ஆந்திரப் பிரதேசம்
- YSR காங்கிரஸ்
- Janasena
- தெலுங்கு தேசம்
- பாஜக
- பவன் கல்யாண்
- காங்கிரஸ்
- கம்யூனிஸ்ட்
திருமலை: ஆந்திராவில் வரும் 13ம்தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனி அணியாகவும், தெலுங்கு தேசம், பாஜக மற்றும் நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சிகள் மற்றொரு அணியாகவும், காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் ஒரு அணியாகவும் என மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. கூட்டணி இல்லாமல் 3வது முறையாக தேர்தல் களம் காணும் முதல்வர் ஜெகன்மோகன், அனைத்து தொகுதிகளிலும் தனி ஆளாக பிரசாரம் செய்து வருகிறார். அதேபோல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் சந்திரபாபு தலைமையிலான பாஜக, ஜனசேனா கூட்டணியினர் இதுவரை வலுவான பிரசாரத்தில் ஈடுபடவில்லை. தெலுங்கு ேதசம் கட்சி கூட்டணியில் மொத்தமுள்ள 25 மக்களவை ெதாகுதிகளில் 6 தொகுதிகளும், 175 சட்டமன்ற தொகுதிகளில் 10 தொகுதிகளும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டன. ஆனால் இந்த ெதாகுதிகளில் நட்சத்திர பேச்சாளர்கள் இதுவரை பிரசாரம் செய்யாமல் தவிர்த்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழகத்தில் நடந்த மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி பலமுறை வந்து பிரசாரம், ரோடு ஷோக்களை நடத்தினார். ஆனால் ஆந்திராவில் இதுவரை ஒரே ஒருமுறை மட்டுமே அமராவதியில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். அதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்மையில் தெலங்கானாவில் பிரசாரம் செய்த நிலையில் ஆந்திராவில் பிரசாரம் செய்ய ஆர்வம் காட்டாமல் புறக்கணித்து வருகிறார். இதேபோன்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரும் இதுவரை ஆந்திராவில் சொந்த கட்சி வேட்பாளர்களுக்கு கூட பிரசாரம் செய்ய முன்வரவில்லை.
இதனால் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன்கல்யாண் ஆகியோர் கடும் அப்செட்டில் உள்ளார்களாம். இனி, பாஜக தலைவர்களை நம்பியிருந்தால் பலன் இல்லை என்பதால் சந்திரபாபு மற்றும் பவன்கல்யாண் ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். இதனால் பாஜக போட்டியிடும் மக்களவை, சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரம் பிசுபிசுத்துள்ளது.
இதுகுறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் நினைத்த நேரத்தில் பலமுறை ரோடு ஷோ, பிரசாரம் என பிரதமர் மோடி வந்து சென்றார். ஆனால் ஆந்திரா வழியாக தமிழகத்திற்கு சென்ற மோடி, அதே ஆர்வத்தை ஆந்திராவில் காட்ட மறுக்கிறார். பிரசாரத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இதுவரை மோடி, அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் ஆந்திராவுக்கு வந்து பிரசாரம் செய்ய ஆர்வம் காட்டவில்லை. தற்போது வரை பிரசாரம் குறித்த திட்டத்தை தெரிவிக்கவில்லை. பாஜகவுக்கு ஒதுக்கிய தொகுதிகளில் பிரசாரம் செய்யக்கூட அவர்கள் யாரும் முன்வராதது ஆச்சர்யமாக உள்ளது. அதற்கேற்ப உண்டவல்லியில் தேர்தல் அறிக்கையை சந்திரபாபு நாயுடு வெளியிடும்போது பாஜ நிர்வாகி அனைவரின் முன்னிலையில் வாங்க மறுத்து ஒதுங்கினார்.
இதனால் கூட்டணி உறவில் ஒருங்கிணைப்பு இல்லாமல் உள்ளது வௌிப்படையாக தெரிகிறது. ஆந்திராவில் வாக்கு சேகரிக்க வந்தால் சிறுபான்மை ஓட்டுகள் கூட்டணிக்கு கிடைக்காது என்ற அச்சம் பாஜகவுக்கு உள்ளது. இதனாலும் அவர்கள் தயக்கம் காட்டலாம் என தெரிகிறது. மேலும், பாஜவின் கூட்டணி கட்சியான மஜத எம்பியும், தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் 3 ஆயிரம் ஆபாச வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ரேவண்ணாவை ஆதரித்து கர்நாடகாவில் பிரதமர் மோடி பிரசாரம் செய்திருந்தார். இந்நிலையில், தென்னிந்திய மாநிலமான ஆந்திராவில் மோடி பிரசாரம் செய்ய வந்தால், ஆபாச வீடியோ பிரச்னை மிகப் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்கும் என்று பாஜ அஞ்சுகிறது. இதன் காரணமாகவும் மோடி, அமித்ஷா ஆந்திராவில் பிரசாரம் செய்ய ஆர்வம் காட்டவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
3 ஆயிரம் ஆபாச வீடியோ புகழ்(?) ரேவண்ணாவை ஆதரித்து கர்நாடகாவில் பிரதமர் மோடி பிரசாரம் செய்திருந்தார். இந்நிலையில், தென்னிந்திய மாநிலமான ஆந்திராவில் மோடி பிரசாரம் செய்ய வந்தால், ஆபாச வீடியோ பிரச்னை மிகப் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்கும் என்று பாஜ அஞ்சுகிறது.
The post ஆபாச வீடியோ பிரச்னை விஸ்வரூபம் எடுப்பதால் ஆந்திராவில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, அமித்ஷா மறுப்பு?: சந்திரபாபு, பவன்கல்யாண் `அப்செட்’ appeared first on Dinakaran.