செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வில்லியம்பாக்கம் சுற்றியுள்ள ஆத்தூர், வடகால், திம்மாவரம், சாஸ்தரம்பாக்கம், வெண்பாக்கம் கொளத்தூர், கொங்கனாஞ்சேரி ஆகிய கிராமத்தில் பயிரிடப்படும் விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகளை வில்லியம்பாக்கம் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திற்க்கு கொண்டு வந்துள்ளனர்.
கடந்த ஒரு மாதங்களாகியும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் சுமார் 5 ஆயிரம் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். வட்டிக்கு பணம் வாங்கியும் நகையை அடகு கடையில் வைத்து விவசாயம் செய்து அறுவடை செய்த நெல் மூட்டைகள் எந்த பாதுகாப்பும் இல்லாமல் வில்லியம்பாக்கம் பகுதியில் கொட்டி வைக்கப்பட்டுள்ளதாக கண்ணீர் மல்க அடுக்கடுக்கான புகார்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
மழை பெய்தால் வில்லியம்பாக்கம் பகுதியில் பாதுகாப்பாற்ற நிலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ள 5 ஆயிரம் மூட்டைகள் வீணாகிவிடும், இதே போல் போதிய மின் விளக்குகள் இல்லாததால் இரவில் நெல் மூட்டைகள் யார் திருடி செல்வார்கள் என்ற அசத்துடன் நெல் மூட்டைகளை கொட்டி வைக்கப்ட்ட இடத்திலேயே ஒரு மாதங்களாக இரவில் பாதுகாப்பாக படுத்தி தூங்கி வருவதாகவும் தெரிவித்தனர்.
அறுவடை செய்த நெல் மூட்டைகளை வில்லியம்பாக்கம் நெல் கொள் முதல் நிலையம் கொண்ட வந்தால் சில தினங்களில் கொள்முதல் செய்து விடுகின்றனர். பலருடைய நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய மறுப்தாகவும் இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால் உரிய பதில் தருவதில்லை என கூறுகின்றனர்.
டோக்கன் முறையில் நெல் கொள்முதல் செய்வதில்லை, ஒரு இந்திரம் மட்டுமே உள்ளது அந்த இயந்திரமும் பழுதானதால் வில்லியம்பாக்கம் பகுதியில் கொண்டு வரப்பட்டுள்ள நெல் மூட்டைகளை எப்போது அதிகாரிகள் கொள்முதல் செய்வார் என விவசாயிகள் கடும் வேதனையில் இருந்து வருகின்றனர். இது தொடர்பாக நெல் கொள்முதல் செய்யும் அதிகாரிகளிடம் கேட்ட போது உரிய பதில் கொடுக்கவில்லை எனவே அறுவடை செய்து ஒரு மாதங்களாக கொள்முதல் செய்யாமல் இருக்க யார் காரணம் என மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டு தேக்கமடைந்த 5 ஆயிரம் மூட்டைகளை உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
The post செங்கல்பட்டு அருகே அறுவடை செய்ய நெல் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யாததால் 5 ஆயிரம் மூட்டைகள் தேக்கம் appeared first on Dinakaran.