×
Saravana Stores

கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது: பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்

டெல்லி: கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்படும் என கூறப்பட்ட நிலையில், கோவாக்சின் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ரத்தம் உறைதல் உள்ளிட்ட எந்த பக்கவிளைவுகளும் இந்த தடுப்பூசியால் ஏற்படாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

கோவாக்சின் இந்தியாவில் ஆராய்ச்சி செய்து உருவாக்கப்பட்ட தடுப்பூசியாகும். கோவிஷீல்டு வெளிநாட்டில் ஆராய்ச்சி செய்து உருவாக்கப்பட்டது என்றாலும் கொரோனா தொற்று காலத்தில் அவசர தேவை இருந்ததால் அனைவருக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும் என்பதற்காக பயன்படுத்தப்பட்டது. பின்னர் கோவாக்சின்க்கு அனைத்து ஒப்புதல் கிடைத்த பிறகு இந்தியாவில் கோவாக்சின் பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோவாக்சின் தடுப்பூசி குறித்து பல்வேறு கருத்துக்கள் பரவி வந்த நிலையில் எந்த விதமான பக்கவிளைவுகளும் இல்லை என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் 27,000 நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்ட முடிவில் கோவாக்சின் தடுப்பூசி அனைவருக்கும் வழங்கப்பட்டது போன்ற பல்வேறு விவரங்களை பாரத் பயோடெக் நிறுவனம் அளித்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசி எடுத்து கொண்டவர்கள் அச்சப்பட தேவை இல்லை எனவும் இதில் எவ்வித பக்கவிளைவுகளும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது: பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Coaxin ,Bharat Biotech Institute ,Delhi ,Bharat Biotech ,Coax ,Dinakaran ,
× RELATED டெல்லியில் அடுத்தாண்டு ஜன. 1ம் தேதி வரை...