சென்னை: ஆன்லைன் சூதாட்டம் பற்றி விளம்பரப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இணையவழி சூதாட்டம், இணையவழி வாய்ப்பு விளையாட்டு, பந்தயம் போன்றவற்றை விளம்பரப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை. ஆன்லைன் சூதாட்டத்தை தூண்டும் வகையில் எந்த நபரும் மின்னணு தொடர்பு சாதனங்கள் உட்பட எந்த ஊடகத்திலும் விளம்பரமோ அறிவிப்போ செய்யக் கூடாது. தடையை மீறி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கு ஓராண்டு வரை சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஆன்லைன் சூதாட்டம் பற்றி விளம்பரப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை appeared first on Dinakaran.