புழல்: சென்னை மாநகர மக்களுக்கு நாள்தோறும் குடிநீர் வழங்குவதில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. பின்னர் ஏரியிலிருந்து குடிநீருக்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததால், அதன் நீர்மட்டம் சரிந்தது. தற்போது சோழவரம், பூண்டி ஏரிகளில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால், புழல் ஏரியில் கடந்த 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் 3 டிஎம்சியாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், தற்போது 3002 மில்லியன் கனஅடியாக நீர் இருப்பு உள்ளது.
மேலும் 21.2 அடி உயரமுள்ள புழல் ஏரியில் தற்போது 19.95 அடி உயரத்துக்கு நீர் நிரம்பியுள்ளது. தற்போது புழல் ஏரிக்கு 415 கனஅடி நீர் வருகிறது. இங்கிருந்து சென்னை குடிநீருக்கு வினாடிக்கு 186 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் புழல் ஏரி கடல் போல் விரிந்து மக்களிடையே அழகுற காட்சியளிக்கிறது.
The post புழல் ஏரியில் நீர் இருப்பு 3 டிஎம்சியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.