- தஞ்சை வலையா கோயில்
- தமிழ்நாடு அரசு
- சென்னை
- தஞ்சை வெலிகா கோயில்
- இந்து சமய அறக்கட்டளை துறை
- தஞ்சை பெருவியர் கோயில்
- தஞ்சை வேலியா கோயில்
சென்னை: தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு பணி தொடர்பாக அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தஞ்சை பெருவுடையார் கோயிலின் அடித்தளத்தை அசைக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையால் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவியது. பெருவுடையார் கோயில் ஒன்றிய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு பணிகள் அனைத்தும் இந்திய தொல்லியல் துறையால் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் மீது அவதூறு பரப்பும் வகையில் காணொளி காட்சி வெளியிட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு பணி தொடர்பாக அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை! appeared first on Dinakaran.