×

இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார்..!!

சென்னை: இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். இராக்கதன், மேதகு ஆகிய படங்களுக்கு இசையமைத்த பிரவீன்குமார் (28) இன்று காலை 6.30 மணி அளவில் உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் உயிரிழந்தார். மேதகு திரைப்படத்தில் பிரபாகரன் அவர்களது வாழ்கை வரலாறை இவரது இசையில் அமைத்திருந்தார்.

இந்நிலையில் பிரவீன்குமார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்பு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு பிரவீன்குமார் மாற்றப்பட்டார். ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. இவரது உடலானது 02.05.2024 அன்று மாலை 6 மணி அளவில் வடக்கு வாசலில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்படுகிறது.

The post இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார்..!! appeared first on Dinakaran.

Tags : Praveen Kumar ,Chennai ,Prabhakaran ,Medagu ,
× RELATED பில்டிங் காண்ட்ராக்டர் வீட்டில் சிபிஐ சோதனை