×

நேற்றைவிட இன்று வெப்பம் அதிகரிக்கும்!.. வாட்டும் வெப்ப நாட்களுக்குப் பின்னர் மழை பெய்யும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் பதிவு!!

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று கரூர் பரமத்தியில் புதிய உச்சமாக 111.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில், தமிழ்நாட்டில் இன்று வெப்பத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவாக கரூர் பரமத்தியில் நேற்று 111.2டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் கொளுத்தியது.

வேலூரில் கடந்த 22ம் தேதி முதல் தொடர்ந்து 34 நாட்களாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகி வரும் நிலையில் நேற்று புதிய உச்சமாக 111.2 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது. ஒட்டுமொத்தமாக 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். கரூர், பரமத்தி, ஈரோடு, திருச்சி, வேலூர், தருமபுரியில் வெப்ப அலை வீசியது. இந்திய அளவில் ஆந்திர மாநிலம் ரெண்டசிந்தலா பகுதியில் 115.1 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

பீகார், மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் கடுமையான வெப்ப அலை வீசியதோடு ஒட்டு மொத்தமாக 7 மாநிலங்களில் வெப்ப அலையின் தாக்கம் இருந்தது. திருத்தணியில் தொடர்ந்து 20 நாட்களாக சதத்தை கடந்து வெப்பம் பதிவாகி வரும் நிலையில் நேற்று 108.5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இந்நிலையில், நேற்றை விட வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். வாட்டும் வெப்ப நாட்களுக்கு பின்னர் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.

 

The post நேற்றைவிட இன்று வெப்பம் அதிகரிக்கும்!.. வாட்டும் வெப்ப நாட்களுக்குப் பின்னர் மழை பெய்யும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் பதிவு!! appeared first on Dinakaran.

Tags : Pradeep John ,Chennai ,Karur Paramathi ,Tamil Nadu ,
× RELATED சென்னையில் இன்று இரவும் மழை பெய்ய வாய்ப்பு: பிரதீப் ஜான் கணிப்பு