×
Saravana Stores

கல்குவாரி வெடிவிபத்து எதிரொலி!: மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் அனைத்தையும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!

மதுரை: காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்து எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் அனைத்தையும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் உள்ள வெடிமருந்து அறையில் வாகனத்தில் இருந்து வெடிமருந்துகளை இறக்கியபோது, வெடி விபத்தில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் கல்குவாரியின் பங்குதாரரான ஆவியூரை சேர்ந்த சேது என்பவர் நேற்று ஆவியூர் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், கல்குவாரியின் உரிமையாளரான சங்கரன்கோவிலை சேர்ந்த ராஜ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே, வெடி விபத்தில் சிக்கி உடல் சிதறி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 12 லட்சம் ரூபாய் நிவாரண உதவி குவாரி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கல்குவாரி வெடிவிபத்து எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் அனைத்தையும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் வெடிமருந்துகள் முறையான அனுமதிபெற்று பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டார். மதுரையில் தீயணைப்புத்துறை, காவல்துறை, கனிமவளத்துறை அதிகாரிகள் கல்குவாரிகளில் ஆய்வு செய்து ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

The post கல்குவாரி வெடிவிபத்து எதிரொலி!: மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் அனைத்தையும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Kalguari ,Madurai District ,Madurai ,Kalgowari ,Aviyur Kalguari ,Kariyapati ,Aviur Kalguari ,Virudhunagar district ,Dinakaran ,
× RELATED மதுரை மாவட்டத்தில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் அடைப்பு