×

நடிகர் பிரபுதேவாவின் பாடல்களுக்கு 100 நிமிடம் தொடர்ந்து நடனமாடும் நிகழ்ச்சி: உலக சாதனை முயற்சி கைவிடப்பட்டு, அர்ப்பணிப்பு நிகழ்ச்சியாக மாற்றம்

சென்னை: நடிகர் பிரபுதேவாவின் 100 பாடல்களுக்கு 100 நிமிடம் தொடர்ந்து நடனமாடும் உலக சாதனை நிகழ்ச்சிக்கு வந்த சிறுவர், சிறுமிகளை வெயிலில் நீண்ட நேரம் நிற்க வைத்ததாக கூறி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பி.எஸ் ராக்ஸ் என்ற அமைப்பின் சார்பாக சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு நடிகர் பிரபுதேவாவிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி அடிப்படையில் நமது மாஸ்டர் நமது முன்னாடி என்ற அடிப்படையில் 100 நிமிடம் தொடர்ந்து 100 பிரபுதேவா பாடலுக்கு 5000க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் நடன கலைஞர்கள் தொடர்ந்து நடனமாடி சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நிகழ்ச்சியானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி வெயிலின் காரணமாக காலை 6 மணிக்கு தொடங்கி 7.30 மணிக்குள் முடிக்கப்படும் என பெற்றோர்களிடம் உறுதியளிக்கப்பட்டது. ஒவ்வொரு சிறுவர், சிறுமிகளுக்கும் 1000 முதல் 2000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. குறிப்பாக 7 மணிக்கு தொடங்கி 8.30 மணிக்குள் இந்த நிகழ்ச்சியை முடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் 9 மணி ஆகியும் நிகழ்ச்சி தொடங்கவில்லை இதனை தொடர்ந்து அங்கிருந்த பெற்றோர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக காலை 5 மணிக்கு சிறுவர், சிறுமிகளை வரவழைத்து விட்டு அவர்களுக்கு உணவு போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் செய்து கொடுக்கவில்லை. தண்ணீர் மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும் 4 மணி நேரம் ஆகியும் குழந்தைகளை வெயிலில் நிற்கவைத்து நடனமாடும் நிகழ்ச்சி தொடங்காமல் சிறப்பு விருந்தினராக வரவிருக்கும் நடிகர் பிரபுதேவாவும் வரவில்லை என தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில் பெற்றோர்களின் வாக்குவாதத்திற்கு பிறகு அவசர அவசரமாக இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சி தொடங்கிய சிறிது நேரத்திலேயே பிரபுதேவா அவர்கள் ஐதராபாத்தில் இருக்கிறார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என அங்கிருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.

இதனால் மேலும் பெற்றோர்கள் ஆத்திரம் அடைந்தனர். ஐதராபாத்தில் உள்ள பிரபு தேவா சிறிது நேரத்தில் வந்துவிடுவார் என்ற நிலையில் அவர் வராததால் பெரும்பான்மையான பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் அழைத்து சென்றனர். இந்த நிகழ்ச்சியானது நடந்து கொண்டிருந்த போது வீடியோ கால் மூலமாக பிரபுதேவா அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களிடமும், கலந்து கொண்ட சிறுவர், சிறுமிகளுடன் பேசினார். தனக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் வரமுடியவில்லை என தெரிவித்து அவர் வருத்தம் தெரிவித்தார். தொடர்ந்து உலக சாதனை நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட பாதியிலேயே நடைபெறாமல் பிரபுதேவா அவர்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியாக ஒரு மணி நேரம் நடனக்கலைஞர்கள் 100 கணக்கானோர் நடனமாடினார்.

ஆயிரக்கணக்கில் சிறுவர், சிறுமியர் கலந்து கொண்ட நிலையில் முறையாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யாமலும், அவர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்காமலும் இருந்த காரணத்தினால் இந்த நிகழ்ச்சி பாதியில் தடைபட்டது. இருப்பினும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் பிரபுதேவா அவர்கள் மீண்டும் ஒரு நாள் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு தேதி கொடுத்திருப்பதாகவும் அந்த தேதியில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இன்று நடைபெற்ற தவறுகள் நடைபெறாமல் நிகழ்ச்சி மீண்டும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்படும். உலக சாதனை மீண்டும் நடத்தப்படும் என உறுதியளித்தனர்.

 

The post நடிகர் பிரபுதேவாவின் பாடல்களுக்கு 100 நிமிடம் தொடர்ந்து நடனமாடும் நிகழ்ச்சி: உலக சாதனை முயற்சி கைவிடப்பட்டு, அர்ப்பணிப்பு நிகழ்ச்சியாக மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Prabhu Deva ,CHENNAI ,Dinakaran ,
× RELATED போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு...