×

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதன் எதிரொலி: வேதாரண்யத்தில் இரவில் வேலை செய்யும் உப்பளத் தொழிலாளர்கள்

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வெப்ப அலையில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள நள்ளிரவு முதல் காலை வரை உப்பள தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினன்வயல், கோடியக்காடு பகுதியில் சுமார் 9,000 ஏக்கர் நிலப்பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வேதாரண்யம் பகுதியில் உள்ள உப்பளங்களை நள்ளிரவு ஒரு மணியில் இருந்து விடிய விடிய உப்பை பாத்திகளில் வாரி சேமிக்கும் பணியில் தொழிலாளர்கள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

காலை 9 மணி வரை தொழிலாளர்கள் முழுவீச்சில் உப்பை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்களுக்கு நிகராக பெண்களும் மிக கடுமையாக உப்பள பகுதிகளில் அனைத்து பணிகளும் செய்து வருகின்றனர். இதனால் உப்பு உற்பத்தி அதிகளவில் நடைபெறுகிறது. இதன் காரணமாக குன்றுகளை போல் ஆங்காங்கே உப்பு குவியல்கள் காட்சியளிக்கின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பு வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.

The post வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதன் எதிரொலி: வேதாரண்யத்தில் இரவில் வேலை செய்யும் உப்பளத் தொழிலாளர்கள் appeared first on Dinakaran.

Tags : Vedaranya ,Nagai ,Vedaranyam ,Nagai district ,Agasthianpalli, Katinnwayal, Kodiakkadu ,
× RELATED நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு