பாட்னா: பீகாரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி பேசிய பேச்சின் ஒளிப்பதிவை ராஷ்ட்டிரிய ஜனதா தளம் பொதுக்கூட்டத்தில் ஒலிபெருக்கி மூலம் தேஜஸ்வி யாதவ் ஒலிபரப்பி பிரச்சாரம் செய்த சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பீகார் மாநிலம் மதுபானி என்ற இடத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ராஷ்ட்டிரிய ஜனதா தளக்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்று பேசினார். அப்போது மேடையில் இருந்து திடீரென பிரதமர் மோடியின் குரல் ஒளிபரப்பப்பட்டதை கேட்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மோடியின் முந்தைய பேச்சை ப்ளூடூத் ஸ்பீக்கர் மூலம் தேஜஸ்வி யாதவே ஒளிபரப்பியதை மக்கள் புரிந்து கொண்டனர்.
குஜராத் முதலமைச்சராக இருந்தபோது பீகார் வந்திருந்த மோடி பணவீக்கம் குறித்து கடுமையாக சாடியிருந்தார். வாக்களிக்க செல்லும் முன்பு சமையல் எரிவாயு சிலிண்டரை குமிட்டுவிட்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டிருந்தார். பிரதமர் மோடியின் முந்தைய பேச்சை பொதுக்கூட்டத்தில் ஒளிபரப்பியதை குறித்து தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். பெரிய பதவியில் அமர்ந்திருக்கும் மோடி இத்தனை பொய்களை பேசக்கூடாது என்று தேஜஸ்வி யாதவ் குறிப்பிட்டுள்ளார். மக்களை திசை திருப்ப பாஜக-வினர் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்று சாடியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி ஏராளமான பொய்களை பேசியுள்ளார் என்று தேஜஸ்வி விமர்சித்துள்ளார்.
The post 10 ஆண்டுகளுக்கு முன்பு மோடி பேசிய பேச்சு மேடையில் ஒலிபரப்பு.. இத்தனை பொய்களை பேசலாமா?: மோடிக்கு தேஜஸ்வி யாதவ் கேள்வி..!! appeared first on Dinakaran.