×

மே மாதத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ920 சரிவு

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ920 குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து சவரன் ரூ55 ஆயிரத்தை கடந்தது. வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ120 அதிகரித்தது. ஆனால் திங்கட்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ240 குறைந்தது. இதேபோன்று செவ்வாய்க்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ80 அதிகரித்து ஒரு சவரன் ரூ 54,000க்கும், கிராமுக்கு ரூ10 அதிகரித்து ஒரு கிராம் ரூ6,750க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் மே மாதத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில் நேற்று அதிரடியாக குறைந்து இருப்பது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு ஆறுதல் அளித்துள்ளது. அதாவது, தங்கம் விலை சவரனுக்கு நேற்று ரூ920 குறைந்து ஒரு சவரன் ரூ53,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தங்கம் கிராமுக்கு ரூ115 குறைந்து ரூ6,635க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ920 குறைந்துள்ளது தங்கம் வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post மே மாதத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ920 சரிவு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Sawaran ,Dinakaran ,
× RELATED ஆவடி அடுத்த கோவில்பதாகையில் தனியார்...