×

பாமக மாஜி நிர்வாகி மீது பெட்ரோல் குண்டு வீச்சு

நெல்லை: பாளையில் பாமக மாஜி நிர்வாகி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை, பாளையை அடுத்த மேலப்பாட்டத்தை சேர்ந்தவர் செல்லப்பா. இவர், பாமக முன்னாள் நிர்வாகியாக இருந்தார். தற்போது கேடிசி நகர் இஸ்மாயில் காலனியில் வசித்து வருகின்றனர். இவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் மேலப்பாட்டத்தில் உள்ள ஒரு நிலம் சம்பந்தமாக பிரச்னை இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மதியம் மேலப்பாட்டம் கிராமத்தில் நின்றிருந்த செல்லப்பா மீது கும்பல் பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பிச் சென்றது. இதில் படுகாயம் அடைந்த செல்லப்பாவை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாமக மாஜி நிர்வாகி மீது பெட்ரோல் குண்டு வீச்சு appeared first on Dinakaran.

Tags : Bamako ,Nellai ,Bamaka ,Palai ,Chellappa ,BAM ,KDC Nagar Ismail Colony ,Dinakaran ,
× RELATED நெல்லையில் மாநகராட்சி பள்ளி...