×

நிலப்பிரச்னை விவகாரம்: விவசாயி மீது துப்பாக்கி சூடு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த புதூர் நாடு வலூதலம்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள் காளி(60), சம்பத்(36). விவசாயிகளான இவர்கள் இருவருக்கும் இடையே பல ஆண்டுகளாக நில பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக நேற்று மதியம் மீண்டும் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சம்பத் தான் மறைத்து வைத்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்து காளி மீது சுட்டார். இதில் துப்பாக்கியில் இருந்து குண்டுகள் காளி மார்பில் பயந்தது. இதில் காயம் அடைந்த அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

The post நிலப்பிரச்னை விவகாரம்: விவசாயி மீது துப்பாக்கி சூடு appeared first on Dinakaran.

Tags : Tirupathur ,Sampat ,Vulthalampattu ,Budur ,
× RELATED நண்பர்களுடன் பணம் கட்டி சீட்டு விளையாடிய நபர் கைது