×
Saravana Stores

ஆபாச வீடியோக்களை வெளியிட்டது யார்?.. துணை முதல்வர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் குமாரசாமி மோதல்


பெங்களூரு: முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியதாவது, ‘பாலியல் வீடியோக்களை மாநில துணைமுதல்வரும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவகுமார், அவரது ஆதரவாளர்கள் மூலம் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் ஆயிரக்கணக்கான பெண்களின் மானத்தையும் கவுரவத்தையும் வீதிக்கு கொண்டு வந்துள்ளதின் மூலம் கீழ்தரமான அரசியல் செய்துள்ளார். எங்கள் குடும்பத்தை அரசியல் ரீதியாக எதிர்க்க வக்கில்லாமல், இதுபோன்ற ஈன செயலில் ஈடுபட்டுள்ளார். துணைமுதல்வர் என்ற பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு, இதுபோன்ற செயலில் ஈடுப்பட்டுள்ள சிவகுமாரை, அமைச்சரவையில் இருந்து முதல்வர் சித்தராமையா நீக்க வேண்டும்.

மேலும் இந்த பென்டிரைவ் விவகாரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாராவது தற்கொலை செய்து கொண்டால், அதற்கான முழு பொறுப்பை அரசாங்கம் ஏற்று கொள்ள வேண்டும்’ என்றார். இதனிடையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள துணைமுதல்வர் சிவகுமார், பென்டிரைவ் கையில் வைத்து மிரட்டும் கலாசாரம் என்னுடையது கிடையாது. குமாரசாமி, அவரது குடும்ப உறுப்பினர் செய்துள்ள தவறை மறைக்க எங்கள் குடும்பத்தின் மீது பழிபோட முயற்சிக்கிறார் ’ என்றார்.

காங். எம்எல்ஏ வீடியோவால் பரபரப்பு
ராம்நகரம் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருக்கும் இக்பால் உசேன், பெண் ஒருவருடன் 2 நிமிடம் 27 வினாடி பேசி கொண்டிருக்கும் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில் வாய்ஸ் ரிகார்ட் இல்லாமல் ஆக்‌ஷனுடன் காட்சி மட்டும் இருப்பதாகவும், ஆபாச வார்த்தைகள் பறிமாறி கொண்டதாக சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இதனிடையில் வீடியோவில் இருப்பது நான் தான் என்பதும், தொகுதியில் பல்வேறு தேவைகளுக்காக மக்கள் வாய்ஸ் கால், வீடியோ கால் செய்து பேசுகிறார்கள். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் எங்கள் கட்சியை சேர்ந்த பெண் தொண்டர், அவர் வசிக்கும் பகுதியில் உள்ள பிரச்னையை என்னுடன் வீடியோகாலில் பேசியதை வெளியிட்டு மஜதவினர் கீழ்தரமான அரசியல் செய்துள்ளதாக இக்பால் உசேன் தெரிவித்துள்ளார்.

The post ஆபாச வீடியோக்களை வெளியிட்டது யார்?.. துணை முதல்வர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் குமாரசாமி மோதல் appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,DK Sivakumar ,Chief Minister ,Kumaraswamy ,Bengaluru ,Former ,Karnataka State Congress ,President ,TK Shivakumar ,
× RELATED மதுரையில் கனமழை பாதிப்பு குறித்து துணை முதலமைச்சர் ஆலோசனை