×

இன்சூரன்சுக்கு முத்திரை தீர்வை வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு


புதுடெல்லி: ராஜஸ்தான் மாநில அரசு இன்சூரன்சுக்கு முத்திரை தீர்வையாக (ஸ்டாம்ப் டியூட்டி) சுமார் 1.9 கோடி ரூபாய் வசூலித்ததற்கு எதிராக எல்ஐசி நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி பி. எஸ். நரசிம்மா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது இந்த வழக்கில் உத்தரவுகளை பிறப்பித்த நீதிபதிகள் ஸ்டாம்ப் டியூட்டி வசூலிப்பது என்பது மாநில அரசின் அதிகாரங்களுக்கும் உட்படக்கூடிய ஒன்றுதான். ஸ்டாம்ப் டியூட்டிகளை நிர்ணயிப்பது மற்றும் வசூலிப்பது ஆகியவற்றிற்கு மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை யாரும் மறுக்க முடியாது என உத்தரவிட்டார்.

The post இன்சூரன்சுக்கு முத்திரை தீர்வை வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Justice ,B.S. ,LIC ,Rajasthan government ,S. Narasimha… ,Dinakaran ,
× RELATED ஆதார் தகவல்களை கையாள்வதற்கு ஒன்றிய...