- ஐரோப்பிய ஒன்றிய
- தில்லி உயர் நீதிமன்றம்
- புது தில்லி
- மருந்து தடுப்பு பிரிவு
- சென்னை
- அரவிந்தாக்சன்
- தின மலர்
புதுடெல்லி: போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 70,772 கிலோ ஹெராயின் மாயமானது தொடர்பாக பதிலளிகக் ஒன்றிய உள்துறைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த அரவிந்த்தாக்ஷ்ன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கடந்த 2018ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 70,772 கிலோ ஹெராயின் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போதை பொருள் தடுப்பு அமைப்பும், தேசிய குற்ற ஆவண காப்பகமும் கொடுக்கும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.
எனவே இவ்விவகாரம் முழு விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டது. இந்த மனு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியன் பிரசாத் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்பதாக கூறிய நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் நான்கு வார காலத்திற்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது.
The post 70,772 கிலோ ஹெராயின் மாயம்; ஒன்றிய உள்துறை பதிலளிக்க உத்தரவு: டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.