×
Saravana Stores

சீனாவில் மலைப்பாதை சரிந்து 24 பேர் பலி

பெய்ஜிங்: சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் மலைப்பாதை சாலை சரிந்து விழுந்ததில் 24 பேர் உயிரிழந்தனர். சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் வடக்கு மீஜோ நகரின் டாபு கவுண்டியில் மலையில் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 2 மணியளவில் அங்கு திடீரென மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. ஏறக்குறைய 18 மீட்டர் அளவுக்கு மலைப்பாதை சரிந்து இடிந்து விழுந்தது. இதில் 20 வாகனங்கள், 54 பயணிகள் சிக்கிக்கொண்டதாக ஹாங்காங்கை தளமாகக் கொண்ட சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்தது.

இதில் 24 பேர் பலியாகி விட்டனர். 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சீனாவில் 5 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான மக்கள் அங்கு சென்றதால் விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் சிக்கிய வாகனங்கள் தீப்பற்றி எரிவதும் வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

The post சீனாவில் மலைப்பாதை சரிந்து 24 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : China ,Beijing ,Guangdong province ,Dapu County, North Meizhou City, Guangdong Province, China ,
× RELATED சீனாவின் சர்வதேச திட்டத்தில் சேர பிரேசில் மறுப்பு