சென்னை: எனது வீட்டில்கூட சிசிடிவி செயலிழந்தது கிடையாது, ஆனால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமரா பிரச்னை வருகிறது. எனவே தேர்தல் ஆணையத்திற்கு இது போதாத காலம் என்று மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தலை நேற்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமரா பிரச்னை வருகிறது. இது தேர்தல் ஆணையத்திற்கு போதாத காலம்.
எனது இல்லத்தில் கூட 26 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. ஒரு நாள்கூட செயலிழந்தது கிடையாது. ஆனால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மட்டுமே செயலிழக்க காரணம் என்ன? மாற்றி மாற்றி வாக்குப் பதிவு சதவீதத்தை சொல்வது தேர்தல் ஆணையத்தின் குளறுபடியாகத்தான் உள்ளது. பாஜவை பொறுத்தவரை சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. உத்தமர் காந்தி போன்று பேசுவார்கள். ஆனால் தேர்தல் பத்திரத்தில் ரூ16,000 கோடி எப்படி வந்தது?.
The post எனது வீட்டில்கூட சிசிடிவி செயலிழந்தது கிடையாது தேர்தல் ஆணையத்திற்கு இது போதாத காலம்: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.