×
Saravana Stores

அமித் ஷா வீடியோ விவகாரம்: தெலங்கானா முதல்வரின் வழக்கறிஞர் டெல்லி போலீசில் ஆஜர்


புதுடெல்லி: அமைச்சர் அமித் ஷா போலி வீடியோ விவகாரம் தொடர்பாக தெலங்கானா முதல்வரின் வழக்கறிஞர் டெல்லி போலீசில் நேரில் ஆஜரானார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இட ஒதுக்கீடு தொடர்பாக பேசிய வீடியோ எடிட் செய்யப்பட்டு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் செல்போனில் இருந்து எக்ஸ் பதிவின் மூலமாக போலி வீடியோ பகிரப்பட்டதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து முதல்வர் ரேவந்த் தனது செல்போனுடன் ஆஜராகும்படி டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பினார்கள்.

இதனை தொடர்ந்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் நேற்று டெல்லி போலீசில் ஆஜரானார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் சவுமியா குப்தா கூறுகையில்,அமைச்சர் அமித் ஷாவின் போலி வீடியோ பகிரப்பட்ட இணையதள கணக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு சொந்தமானது இல்லை” என்றார்.

The post அமித் ஷா வீடியோ விவகாரம்: தெலங்கானா முதல்வரின் வழக்கறிஞர் டெல்லி போலீசில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Telangana ,CM ,Delhi Police ,New Delhi ,Chief Minister ,Minister ,Union ,Revanth ,Dinakaran ,
× RELATED அமித்ஷாவின் வெளிநாட்டு பயணம் குறித்த...