×

விரக்தியடைந்து, ஏமாற்றமடைந்துள்ள பிரதமர் மோடி பேசும் வார்த்தைகளைக் கேளுங்கள்: ராகுல் காந்தி

டெல்லி: விரக்தியடைந்து, ஏமாற்றமடைந்துள்ள பிரதமர் மோடி பேசும் வார்த்தைகளைக் கேளுங்கள்; மக்களின் வீட்டில் உள்ள அறை, கழுத்தில் உள்ள தாலி, எருமையை காங்கிரஸ் பறிக்கும் என கூறுகிறார் பிரதமர் மோடி என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அபத்தமான, பொய்யான விஷயங்களைச் பிரதமர் நரேந்திர மோடி சொல்கிறார் என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது; “விரக்தியடைந்த, ஏமாற்றமடைந்த மற்றும் தோல்வியடைந்த பிரதமரின் வார்த்தைகளைக் கேளுங்கள்:

– உங்கள் வீட்டில் உள்ள அறையை காங்கிரஸ் பறித்துவிடும்
– உங்கள் கழுத்தில் உள்ள மங்களசூத்திரத்தை காங்கிரஸ் பறிக்கும்
– காங்கிரஸ் உங்கள் எருமையைப் பறிக்கும்

300-க்கு 150-க்கும் மேற்பட்ட இடங்களை தன்னிடம் இருந்து பறித்து காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது என்பதற்காகவே நரேந்திர மோடி இதுபோன்ற தவறான, பொய்யான விஷயங்களைச் சொல்கிறார்.

இந்த அச்சத்தில், பிரதமர் என்ற கண்ணியத்தை மறந்து, ‘பொய்களின் இயந்திரமாக’ மோடி மாறிவிட்டார்

இந்திய அரசு பொதுமக்களிடம் இருந்து எடுக்காது, அவர்களுக்குக் கொடுக்கும் – மோடி தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு செலவழித்த அதே தொகை.

நமது அரசு அதானிகளின் ஆட்சியாக இருக்காது, இந்துஸ்தானியர்களின் ஆட்சியாக இருக்கும்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

The post விரக்தியடைந்து, ஏமாற்றமடைந்துள்ள பிரதமர் மோடி பேசும் வார்த்தைகளைக் கேளுங்கள்: ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Tags : Modi ,Rahul Gandhi ,Delhi ,Congress ,Prime Minister Modi ,
× RELATED நாட்டு மக்களுக்கு உரிமைகளும்...