×

தீ விபத்தில் சிக்கி சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மாணவி டயப்பர் அணிந்து தேர்வு எழுத ஐகோர்ட் கிளை அனுமதி

மதுரை: தீ விபத்தில் சிக்கி சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மாணவி டயப்பர் அணிந்து தேர்வு எழுத ஐகோர்ட் கிளை அனுமதி அளித்துள்ளது. சிறுவயதில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மாணவி சார்பில் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் கிளை முடித்து வைத்தது. மனுதாரரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு கோரிக்கையை தேசிய தேர்வு முகமை ஏற்றுக் கொண்டுள்ளது என நீதிபதி தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கான ஆடைக் கட்டுப்பாட்டில் மாணவிகள் சானிட்டரி நாப்கின் அணிய அனுமதி தந்திருக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

The post தீ விபத்தில் சிக்கி சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மாணவி டயப்பர் அணிந்து தேர்வு எழுத ஐகோர்ட் கிளை அனுமதி appeared first on Dinakaran.

Tags : ICourt branch ,Madurai ,Dinakaran ,
× RELATED பக்ரீத் பண்டிகை அன்று பொது இடத்தில்...