×
Saravana Stores

இன்று மே 1ம் தேதி தொழிலாளர் தினம்; சுத்தியை கொண்டு கைகளால் கல்லுடைக்கும் தொழிலாளர்கள்: மானியத்தில் கொட்டகை அமைத்து தர வலியுறுத்தல்

பெரம்பலூர்: இன்று மே1ம் தேதி- தொழிலாளர் தினம். பெரம்பலூர் மாவட்டத்தில் -காலங்காலமாக சுத்தியைக் கொண்டு கைகளால் கல்லுடைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கிரைண்டர்- மிக்சி வந்து விட்ட நவீன காலத்திலும் பாரம்பரியத்தை விட்டு விடாதவர்களுக்காக அம்மிக்கல், ஆட்டுக்கல் தயாரிக்கும் தொழிலாளர்கள்.மானியத்தில் கொட்டகை அமைத்துத் தர வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலகின் பல்வேறு நாடுகளிலும் வெடித்த தொழிலாளர் போராட்டங்களின் விளைவாக 1889ல் பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் சர்வதேசத் தொழிலாளர் பாராளுமன்றம் கூடி, கார்ல்மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணிநேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது, 1890 மே-1ம்தேதியன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்த வேண்டும் என்று அறை கூவல் விடப்பட்டது. இதுவே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே-தினமாகக் கடைபிடிக்க வழிவகுத்தது. இன்றைக்கு தமிழகத்தில் தொழிலாளர்களுக்கென நலவாரியங்கள் அமைக் கப்பட்டு அதில் அமைப்பு சாரா தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் என அனைத்து வகையான தொழிலாளர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பணிப் பாதுகாப்பு, காயமடைந்தால், இறந்தால் இழப்பீட்டுத் தொகை, அவர்களது வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்குதல் என அரசின் பல்வேறு திட்டப் பணிகளை, பணப் பயன்களைப் பெற்றுத் தருகிறது.

இருப்பினும் கல்லுடைக்கும் தொழிலாளர்கள் பாதுகாப்பான இருப்பிடம், தகுதியான ஊதியமின்றி இன்றளவும் திண்டாடித் தான் வருகின்றனர்.இதற்கு பெரம்பலூர் மாவ ட்டத்தில் கல்லுடைக்கும் தொழிலாளர்களது வாழ்க்கையே சாட்சியாக உள்ளது. பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் எசனை காட்டுமாரியம்மன் கோயிலில் இருந்து நாவலூர் செல்லும் வழியில் மலையடி வாரத்தில் கல்லுடைக்கும் தொழிலை மேற்கொண்டு வரும் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இதேபோல் எளம்பலூர் இந்திரா நகர், பாடாலூர் அருகே ஊட்டத்தூர் சாலை, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கருங் கற்களை சுத்தியல் கொண்டு உடைத்து ஜல்லிகளாக்கி மிகக் குறைந்த விலைக்கு விற்றும், வேலைக்குக் கூலியாக பணத்தை பெற்றும் பிழைப்புநடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் எசனை, துறைமங்கலம், வடக்கு மாதவி, எளம்பலூர், செங்குணம், கவுல் பாளையம், மருதடி, எறையூர், பாடாலூர், நாரணமங்கலம் உள்ளிட்டப் பல்வேறு இடங்களில் 100க்கும் மேற்பட்ட கிரஷர்கள் உள்ளன. 10 நிமிடங்களில் பாறைகளை உடைத்துத் தூள்தூளாக்கும் கிரஷர்கள் கணக்கற்ற நிலையில் காணப்படும் பெரம்பலூர் மாவட்டத்தில்தான், தங்கள் கைளால் சுத்தியைக் கொண்டு கருங்கற்களை உடைத்து கட்டுமானப் பணிகளுக்கான ஜல்லிக் கற்களை உருவாக்கும் கல்லுடைக்கும் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

இதில் குறிப்பிட்ட சில குடும்பங்கள் மட்டும் பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் அம்மிக்கல், ஆட்டுக்கல் தயாரித்து விற்பனை செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாரம் பரிய சமையல் முறையைக் கைவிட விரும்பாமலும், பழமை மாறாமலும் அம்மிக்கல்,ஆட்டுக்கல் பயன்படுத்தும் கிராமப்புற மக்களைநம்பி இந்தத் தொழிலை இடைவிடாமல் செய்து வருகின்றனர்.

மேலும் இஞ்சி நசுக்கும் சிறிய உரல், கல்சட்டிகளை யும் தயாரித்து விற்கின் றனர். இதுபோன்று ஜல்லிக் கற்களை உடைக் கும் தொழிலாளர்களுக்கும், அம்மிக்கல்- ஆட்டுக்கல் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கும், வெங்காய கொட்டகை 100 சதவீத மானியத்தில் அமைத்து தருவது போல் மாவட்ட நிர்வாகம் அமைத்துக் கொடுத்தால், மழைக்கும் வெயிலுக்கும் பாதுகாப்பான இடத்தில் பணிபுரிய ஏதுவாக இருக்கும்.

மேலும் கல் உடைக்கும் தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வி கற்கவும் நலவாரியத்தின் பயன்களை முழுமையாக அறிந்து தவறாமல் பெற்று பயனடையும் அவர்களுக்கு தேவையான விழிப்புணர்வை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும் என்பதே இவர்களது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அரசு செய்யும் பேருதவியாக இருக்கும்.

குறிப்பிட்ட சில குடும்பங்கள் மட்டும் பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் அம்மிக்கல், ஆட்டுக்கல் தயாரித்து விற்பனை செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாரம் பரிய சமையல் முறையைக் கைவிட விரும்பாமலும், பழமை மாறாமலும் அம்மிக்கல்,ஆட்டுக்கல் பயன்படுத்தும் கிராமப்புற மக்களைநம்பி இந்தத் தொழிலை இடைவிடாமல் செய்து வருகின்றனர்.

The post இன்று மே 1ம் தேதி தொழிலாளர் தினம்; சுத்தியை கொண்டு கைகளால் கல்லுடைக்கும் தொழிலாளர்கள்: மானியத்தில் கொட்டகை அமைத்து தர வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Perambalur District ,Grinder ,Mixi ,Ammikal ,Attukka ,Dinakaran ,
× RELATED நிலமற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர்...