- புதுச்சேரி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திருச்சி சிறப்பு மையம்
- தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
- திருச்சி
- திருச்சி கலெக்டர்
திருச்சி, மே 1: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு மையத்தில் தமிழகத்தில் 38 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி அஞ்சல் வாக்குகள் ஆகியவற்றை அந்தந்த மாவட்டம் மற்றும் புதுச்சேரி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் பிரித்து வழங்கும் பணியை மாவட்ட வருவாய் துறை அலுவலர் ராஜலெட்சுமி நேற்று துவக்கி வைத்தார். நாடாளுமன்ற தோ்தல்-2024ஐ முன்னிட்டு மாநிலம் முழுவதும் அஞ்சல் வாக்குகள் வழங்கப்பட்டு, தோ்தல் பணியாற்றும் அலுவலா்களிடம் இருந்து பெறப்பட்ட பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகளை உரிய நாடாளுமன்ற தொகுதிக்கு அனுப்புவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, இந்திய தோ்தல் ஆணையம் ஏப்.17,18 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தோ்தல் அலுவலா்கள் மற்றும் புதுச்சோி தோ்தல் அலுவலா்களிடம் இருந்து பெறப்பட்ட பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகள் மற்றும் பதிவு செய்யப்படாத அஞ்சல் வாக்குகளை தொடா்புடைய தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு பிரித்து வழங்கிட பொதுவான சிறப்பு மையமாக திருச்சி மாவட்டம் தோ்வு செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் அஞ்சல் வாக்குகளை பிரித்து வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுவான சிறப்பு மையம் அமைத்திட உரிய ஏற்பாடுகள் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முதல் தளத்தில் செய்யப்பட்டிருந்தது. இம்மையத்தில் அஞ்சல் வாக்குகள் பிரித்து வழங்கும் பணியை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி நேற்று துவக்கி வைத்தார். ஏற்கனவே இது தொடா்பாக திருச்சி கலையரங்கம் மஹாலில் ஏப்.17 அன்று நடந்த பொதுவான சிறப்பு மையத்தில் 93 ஆயிரத்து 642 பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகள் அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. அதனை தொடா்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்கள் மற்றும் புதுச்சோி அஞ்சல் வாக்குகள் தொடா்பாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு அலுவலா்களால் அந்தந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 8 ஆயிரத்து 827 எண்ணிக்கையிலான அஞ்சல் வாக்குகள் மற்றும் 21 ஆயிரத்து 890 எண்ணிக்கையிலான பதிவு செய்யப்படாத அஞ்சல் வாக்குகள் தொடா்புடைய தோ்தல் நடத்தும் அலுவலரால் நியமனம் செய்யப்பட்ட அலுவலா்களிடம் பிரித்து வழங்கப்பட்டது.
ஏப்.17 மற்றும் மற்றும் ஏப்.30 ஆகிய இரு நாட்கள் நடந்த சிறப்பு மையத்தில் மொத்தம் 1 லட்சத்து 2 ஆயிரத்து 469 எண்ணிக்கையிலான பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகள் மற்றும் 21 ஆயிரத்து 890 எண்ணிக்கையிலான பதிவு செய்யப்படாத அஞ்சல் வாக்குகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் அஞ்சல் வாக்குகளை கவனிக்கும் தொடா்பு அலுவலா்கள், உதவியாளா்கள் மற்றும் அனைத்து அங்கீகாிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள், வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் கலந்து கொண்டனா்.
The post தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்கள், புதுச்சேரி தேர்தல் அலுவலர்களுக்கு தபால் வாக்குகளை பிரித்து அனுப்பும் பணி: திருச்சி சிறப்பு மையத்தில் டிஆர்ஓ முன்னிலையில் நடந்தது appeared first on Dinakaran.