- திருச்சி சிவில் நீதிமன்றங்கள்
- திருச்சி
- திருச்சி மாவட்ட நீதிமன்றம்
- சென்னை உயர் நீதிமன்றம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
திருச்சி, மே 1: திருச்சி மாவட்ட கோர்ட்டிலுள்ள சிவில் கோர்ட்டுகளுக்கு இன்று முதல் ஜூன் 2ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டிலுள்ள சிவில் கோர்ட்டுகளுக்கு ஆண்டுதோறும் மே 1ம் தேதி முதல் ஒரு மாதம் கோடை விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி திருச்சி மாவட்ட கோர்ட்டிலுள்ள சிவில் கோர்ட்டுகளுக்கு இன்று முதல் வரும் ஜூன் 2ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மகிளா கோர்ட், பிசிஆர் கோர்ட், கூடுதல் மகிளா கோர்ட், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு கோர்ட், தொழிலாளர் கோர்ட் உள்ளிட்ட சிறப்பு கோர்ட்டுகள் மற்றும் சிஜேஎம் கோர்ட், 6 மாஜிஸ்திரேட் கோர்ட்டுகள் வழக்கம் போன்று இயங்கும்.
அதேபோன்று கிரிமினல் வழக்குகள் குறித்த அவசர மனுக்களை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதியும் (பிசிஆர் கோர்ட்), சிவில் வழக்குகள் தொடர்பான அவசர மனுக்களை முதலாவது சப்கோர்ட் நீதிபதியும் வாரத்தில் ஒரு நாள் மட்டும் விடுமுறை கோர்ட் பொறுப்பு நீதிபதிகளாக இருந்து விசாரிப்பார்கள் என கோர்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதன்முறையாக குடும்ப நல கோர்ட்டுகளுக்கும் 14 நாட்கள் கோடை விடுமுறை மெட்ராஸ் ஐகோர்ட் பெண் வக்கீல்கள் சங்கம் சார்பில் ஐகோர்ட் பதிவாளர் ஜோதிராமனிடம் கடந்த ஏப்.18ம் தேதி ஒரு கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டது. அதில், குடும்பநல கோர்ட்டுகளுக்கும் மே.1ம் தேதி முதல் மே.15ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த கோரிக்கையை ஏற்ற ஐகோர்ட் நிர்வாகம் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் இருக்கும் அனைத்து குடும்ப நல கோர்ட்டுகளுக்கும் இந்த ஆண்டு மே.1ம் தேதி முதல் மே.14ம்தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக ஐகோர்ட் பதிவாளர் ஜோதிராமன் அறிவித்துள்ளார். இதையடுத்து குடும்பல கோர்ட்டுகளுக்கு முதன்முறையாக 14 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
The post திருச்சி சிவில் கோர்ட்டுகளுக்கு ஒரு மாதம் கோடை விடுமுறை appeared first on Dinakaran.