- வேளாண் கல்லூரி
- ஏலூர்பட்டி
- முசிறி
- தாணியம், திருச்சி மாவட்டம்
- எம்ஐடி வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
- விவசாயிகள், வேளாண் கல்லூரி
முசிறி, மே 1: திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே ஏலூர்ப்பட்டியில் விவசாயிகள் முசிறி எம்ஐடி வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுடன் கலந்துரையாடல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. முசிறி எம்ஐடி வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் கிராமப்புறங்களில் தங்கி விவசாயிகளின் அனுபவங்களை தெரிந்துக்கொண்டும், தாங்கள் கற்ற வேளாண் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு தெரிவிக்கும் விதமாக கிராமங்களில் களப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர், அதனடிப்படையில் ஏழூர்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகளை சந்தித்து வாழை மரத்தை தாக்கும் நோய்கள் குறித்தும், அதனை கட்டுப்படுத்தும் முறை பற்றியும் மாணவர்கள் வரைபடம் மூலமாக விவரித்து தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையே கலந்துரையாடல்கள் நடைபெற்றது.
இதேபோல தொட்டியம் அடுத்த பாலசமுத்திரம் கிராமத்தில் களப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி மாணவிகள் சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இந்த பேரணியில் பாலசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கீதா ராணி தலைமையில் பள்ளி குழந்தைகள் மற்றும் வேளாண்மை கல்லூரி மாணவிகள் கிராமத்தின் முக்கிய விதிகள் வழியாக பொது மக்களிடம் சீமை கருவேல மரங்களின் தீமைகள் குறித்து கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாக சென்று மீண்டும் பள்ளியை சென்றடைந்தனர்.
The post ஏலூர்ப்பட்டியில் விவசாயிகள், வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்துரையாடல் appeared first on Dinakaran.