ஜெயங்கொண்டம், மே1: ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு ஓ ஆர் எஸ் கரைசல் வழங்கும் முகாம் நேற்று துவங்கியது.வெப்ப அலை கோடை வெயிலில் தாக்கத்தினால் ஏற்படும் வெப்ப அலைகளில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் தமிழக முழுவதும் ஓஆர்எஸ் கரைசல் வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது.ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் மற்றும் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் ஆகிய இரண்டு இடங்களில் நேற்று முகாம் துவங்கியது. முகாமினை நகராட்சி ஆணையர் அசோக் குமார் துவக்கி வைத்தார். நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் அசோக் குமார் முன்னிலை வசித்தார்.
நிகழ்ச்சியில் நகராட்சி மேலாளர் அன்புச்செல்வி, நகராட்சி பொறியாளர் ராஜகோபாலன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார், துப்புரவு ஆய்வாளர் மணிவண்ணன், களப்பணி உதவியாளர் விஜயகுமார், சுகாதார ஆய்வாளர் ஜிஜின், ஆகியோர் கலந்து கொண்டு நகராட்சி பணியாளர்கள் அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் கரைசல் வழங்கினர்.மேலும் செயற்கைக் குளிர்பானங்கள் மது அருந்துதல் புகைப்பிடித்தலை தவிர்க்கவும்.உடலில் நீர் சத்து குறையாமல் இருக்க தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். லேசான, வெளிர் நிற ஆடையணிந்து பாதுகாப்பு கண்ணாடி, குடை, தொப்பி மற்றும் காலணிகளை பயன்படுத்த வேண்டும்.முக்கியமாக காலை 12 மணியிலிருந்து மாலை 3 மணிவரை வெயிலில் வெளியே செல்ல வேண்டாம்.
உஷ்ணம் அதிகமாக இருக்கும் போது கடினமான உழைப்பை தவிர்க்கவும் மதுபானம், டீ, காபி, சோடா வகையான பானங்களை தவிர்க்கவும் வெப்பத்தை குறைக்க உதவும். குளிர்ந்த ஆடையால் போர்த்தவும். பயணத்திற்கு தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும்.வெளியே வேலை செய்யும்போது, தொப்பி, குடை ஆகியவற்றை பயன்படுத்தவும். தலை,கழுத்து, முகம் மற்றும் கால்களின் மேல் ஈரத்துணியை பயன்படுத்தலாம்.லஸ்லி, கஞ்சி, பழச்சாறு மோர் போன்றவற்றை பயன்படுத்தவும், குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்கவும்.வெயிலில் வெளியே செல்ல வேண்டாம். முக்கியமாக காலை 12 மணியிலிருந்து மாலை 3 மணிவரை வெப்பம் அதிகமாக இருக்கும் போது கடினமான உழைப்பை தவிர்க்கவும் மதுபானம், டீ, காபி, சோடா வகையான பானங்களை தவிர்க்கவும்.வெப்பத்தை குறைக்க உதவும்.
குளிர்ந்த ஆடையால் போர்த்தவும்.வெப்பத்தை குறைக்க உதவும் குளிர்ந்த ஆடையால் போர்த்தவும் இவ்வாறு ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் அசோக் குமார் பொது மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
The post ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் கரைசல் வழங்கும் முகாம் appeared first on Dinakaran.