×

எசனை காட்டு மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பெரம்பலூர்,மே.1: எசனை காட்டு மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பெரம்பலூர் அருகே உள்ள எசனை காட்டு மாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்ட திருவிழா கடந்த 14ம் தேதி காலை பூச்சொரிதலுடன் தொடங்கியது. தொடர்ந்து 21ம் தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 24ம்தேதி முதல் நாள்தோறும் அம்மன் திருவீதி உலா நடை பெற்றது. 29ம்தேதி அலகு குத்துதல், அக்னிச் சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடை பெற்றது. இரவு குதிரை வாகனத்தில் அம்மன் திரு வீதியுலா நடைபெற்றது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று (30ம் தேதி) காலை எசனை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகேயுள்ள திடலிலிருந்து தொடங்கி நடைபெற்றது. அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்து, இரவு 7மணிக்கு மீண்டும் நிலையை வந்தடைந்தது.

தேரோட்டத்தில் எசனை மட்டுமன்றி கீழக்கரை சோமண்டா புதூர், பூலாம்பாடி, வெங்கலம், பெரம்பலூர், குரும்பலூர், லாடபுரம், ஈச்சம்பட்டி, ஆலம்பாடி, செஞ்சேரி, பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், அம்மன் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இன்று மாலை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். ஆய்வின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை, கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காணிப்பு அறை ஆகியவற்றை பார்வையிட்டு துணை ராணுவத்தினர், சிசிடிவி கேமரா கண்காணிப்பு, மாவட்ட காவல்துறை பாதுகாப்பு ஆகியோர் மூலம் செயல்படுத்தப்படும் சுழற்சி முறை பாதுகாப்பு குறித்தும் பார்வையிட்டு கேட்டறிந்தார்.

மேலும், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பாதுகாப்பிற்கான குறிப்பேட்டு பதிவுகளை பார்வையிட்டு பதிவேட்டில் மாவட்ட தோ்தல் அலுவலா் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்ணா கையெழுத்திட்டார்.

The post எசனை காட்டு மாரியம்மன் கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Esanai Kattu ,Mariamman ,Temple ,Perambalur ,Esanai Kattu Mariamman ,procession ,Chitrai Therota festival ,Esanai Kattu Mariamman Temple ,Esanai ,Kattu Mariamman Temple ,
× RELATED தஞ்சை-நாகை சாலையில் மாரியம்மன் கோயில்...