- திண்டுக்கல் சீலப்பாடி
- திண்டுக்கல்
- என்.எஸ்.நகர் மெயின் ரோடு
- சீலபதி
- பஞ்சாயத்து
- திண்டுக்கல் ஒன்றியம்
- பஞ்சாயத்து நிர்வாகம்
திண்டுக்கல், மே 1: திண்டுக்கல் ஒன்றியம், சீலப்பாடி ஊராட்சிக்குட்பட்ட என்எஸ் நகர் மெயின் ரோட்டில் கால்வாய் அடைப்பின் காரணமாக வீதிகளின் கழிவுநீர் வழிந்து ஓடியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, ஊராட்சி செயலர் சுதாகர் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் கொண்டு என்எஸ் நகரில் கழிவுநீர் அடைப்பு அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.
என்எஸ் நகர் மெயின் ரோட்டில் உள்ள கடைகள் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் அதில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வழிந்து ஓடும் நிலை ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தூய்மை பணியாளர்கள் உடனடியாக அப்பகுதியில் உள்ள கால்வாயின் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி கழிவுநீரை வழிந்தோட செய்தனர்.மேலும் இனி கழிவுநீர் கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
The post திண்டுக்கல் சீலப்பாடியில் கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம் appeared first on Dinakaran.