×

எம்ஜிஆர் நகர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற பெண் உட்பட 5 பேர் கைது

சென்னை: எம்ஜிஆர் நகர் அண்ணா மெயின் ரோட்டில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மொபட்டில் வந்த இளம்பெண், போலீசாரை பார்த்ததும், தப்ப முயன்றர். அவரை மடக்கி பிடித்து, அவரது மொபட்டை சோதனை செய்தபோது, அதில் 20 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் எம்ஜிஆர் நகர் லட்சுமணன் தெருவை சேர்ந்த ரவுடி சரவணனின் மனைவி சரிதா (25) என தெரியவந்தது. இவரது கணவன் சரவணன் கொலை வழக்கில் தற்போது புழல் சிறையில் இருப்பதும்,

சரவணன் தனது நண்பர்களான பூபதி (21), கார்த்தி (எ) டியோ கார்த்தி (26), எம்ஜிஆர் நகர் சூளை பள்ளம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (எ) குள்ள ராஜேஷ் (21), ஈஸ்வர் (21) ஆகியோர் உதவியுடன் சரிதா போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அதைதொடர்ந்து சரிதா உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 போதை மாத்திரைகள் மற்றும் போதை மாத்திரைகள் கடத்த பயன்படுத்திய மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.

The post எம்ஜிஆர் நகர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற பெண் உட்பட 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : MGR Nagar ,CHENNAI ,MGR Nagar Anna Main Road ,
× RELATED ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சாலை மறியல்