×

போலி மருத்துவ சான்றிதழ் தந்து பரோல் கைதிக்கு வழங்கப்பட்ட விடுப்பு தற்காலிகமாக நிறுத்திவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 25ம் தேதி காளிமுத்து (எ) வெள்ளை காளி என்ற குற்றவாளிக்கு 15 நாள் சாதாரண விடுப்பு வழங்கி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, விடுப்பு தொடர்பான ஆவணங்களை, காவல்துறையினர் சரிபார்க்கும் போது காளிமுத்து தந்துள்ள மருத்துவ சான்றிதழ் போலி என்று தெரியவந்துள்ளது.

போலி ஆவணங்கள் மூலம் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி விடுப்பு பெற்றுள்ளார். எனவே, அவருக்கு தரப்பட்ட விடுப்பை நிறுத்தி வைக்க வேண்டும். காளிமுத்து மீது 16 வழக்குகள் நிலுவையில் உள்ளது. மொத்தம் 37 வழக்குகள் பதியப்பட்டிருந்தது என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், குற்றவாளி காளிமுத்துவுக்கு சாதாரண விடுப்பை தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவிட்டனர்.

The post போலி மருத்துவ சான்றிதழ் தந்து பரோல் கைதிக்கு வழங்கப்பட்ட விடுப்பு தற்காலிகமாக நிறுத்திவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai High Court ,Kalimuthu (A) Villiya Kali ,Madras High Court ,MS Ramesh ,Sundar Mohan ,
× RELATED உரிமை மீறல் நோட்டீஸ்: தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்