×
Saravana Stores

ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விரைவில் வழிகாட்டு நெறிமுறை வெளியிட தமிழக அரசு திட்டம்

சென்னை: ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று நீதிமன்றம் நேற்று அறிவித்ததை தொடர்ந்து, தமிழக அரசு விரைவில் வழிகாட்டு நெறிமுறை வெளியிட திட்டமிட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7ம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம் என்று சென்னை, உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை ஓரிரு நாளில் வெளியிட தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதற்காக மின்ஆளுமை துறை, வருவாய் துறை, சுற்றுலா, வனத்துறை, காவல்துறை, போக்குவரத்து, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து இ-பாஸ் நடைமுறைகளை வகுப்பது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

கொரோனா காலத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு செல்வதற்கு இ-பாஸ் விண்ணப்பித்தது போன்று ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தலைமை செயலாளர் வழிகாட்டுதல் அடிப்படையில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கண்காணிப்பில் வருவாய்த்துறை மூலமாக இ-பாஸ் நடைமுறைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விரைவில் வழிகாட்டு நெறிமுறை வெளியிட தமிழக அரசு திட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Ooty ,CHENNAI ,Kodaikanal ,Ooty-Kodaikanal ,
× RELATED சமுதாய மற்றும் வகுப்பு...