பாட்னா: பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலுவுக்கு ஒரு சிறுநீரகத்தை தானாமாக தந்த அவரது மகள் ரோகிணி ஆச்சார்யா, அக்கட்சியின் சரண் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். முன்னாள் ஒன்றிய அமைச்சரான பாஜ வேட்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடியை எதிர்த்து போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் தனது வேட்புமனுவை ரோகிணி தாக்கல் செய்தார்.
அதில் தனக்கு ரூ.2.99 கோடி அசையும் சொத்துக்களும், ரூ.12.82 கோடி அசையா சொத்துகள் உட்பட ரூ.15.82 கோடிக்கு சொத்துகள் இருப்பதாக கூறி உள்ளார். அவரது கணவருக்கு ரூ.19.86 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ரொக்கமாக கையில் ரூ.20 லட்சமும் கணவரிடம் ரூ.10 லட்சம் இருப்பதாகவும் ரோகிணி கூறி உள்ளார். சரண் தொகுதியில் மே 20ம் தேதி 5ம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
The post லாலு மகள் ரோகிணியின் சொத்து மதிப்பு ரூ.16 கோடி: பிரமாண பத்திரத்தில் தகவல் appeared first on Dinakaran.