புதுடெல்லி: வாச்சாத்தி பாலியல் சம்பவம் தொடர்பான வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எம்.திரிவேதி தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளிகள் தரப்பில் ஒரு வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதாவது இந்த விவகாரத்தில் எத்தனை பேர்கள் குற்றவாளி, அவர்களின் தன்மை, அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டணை விவரங்கள் ஆகிய அனைத்தும் அதில் அடங்கி இருந்தது.
இதையடுத்து அதனை பரிசீலனை செய்த நீதிபதிகள், தாக்கல் செய்யப்பட்டுள்ள வரைவில் பிழை இருப்பதால் அதனை திருத்த செய்து புதியதாக தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி, வழக்கின் விசாரணையை ஜூலை மாதம் இறுதிக்கு ஒத்திவைத்தார். மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகள் சரணைடைவதில் இருந்து விலக்கு அளித்து அவர்களது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததோடு, உயர்நீதிமன்றத்தை அணுகி அறிவுறுத்தினர்.
The post வாச்சாத்தி தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.