வேலூர், மே 1: வேலூரில் தனியார் ஹவுசிங் பைனான்ஸ் கம்பெனியில் ₹13.12 லட்சம் மோசடி செய்த ஊழியர், அவரது மனைவியை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். வேலூரில் மெயின் பஜாரில் பிரபல தனியார் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கடனை வசூலிக்கும் நிர்வாக பணியில் வேலூர் ஓல்டு டவுன் உத்திர மாதா கோயில் தெருவை சேர்ந்த ரஜனி பணியாற்றி வந்தார். இந்நிலையில் இந்த நிறுவனத்தில் தணிகை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கடந்த ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை உள்ள காலக்கட்டத்தில் 14 நபர்களிடம் வசூல் செய்த ₹13 லட்சத்து 12 ஆயிரத்து 884 ரூபாய் நிறுவன வங்கி கணக்கில் வரவு வைக்கமால் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது வசூலித்த பணத்தை ரஜனி வங்கி கணக்கில் செலுத்தாமல் அவரது வங்கி கணக்கும், ரஜனியின் மனைவி பாக்கியலட்சுமியின் வங்கி கணக்கிற்கும், பணத்தை வரவு வைக்கப்பட்டு உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிறுவன மேலாளர் கிரண்குமார் இதுகுறித்து வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து நேற்று ரஜனி(42) மற்றும் அவரது மனைவி பாக்கியலட்சுமி (43) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post ₹13.12 லட்சம் மோசடி செய்த ஊழியர் மனைவியுடன் கைது வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை வேலூரில் தனியார் ஹவுசிங் பைனான்ஸ் கம்பெனியில் appeared first on Dinakaran.