×

வட்டார மருத்துவ அலுவலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

ஓட்டப்பிடாரம், மே 1: மணியாச்சி அருகே ஒட்டநத்தம் வட்டார மருத்துவ அலுவலராக பணிபுரிந்த டாக்டர் தங்கமணி, மருத்துவ துறையில் 35 ஆண்டு காலம் பணியாற்றிய நிலையில் ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு ஒட்டநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. கோவில்பட்டி மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் ஜெக வீரபாண்டியன் என்ற குணசேகரன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சண்முகையா எம்எல்ஏ, ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு டாக்டர் தங்கமணிக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். ஒட்டநத்தம் வட்டார பகுதிக்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவர்கள் அன்பு மாலதி, பிளஸ்ஸி நிற்றிஷா, ஜீவராஜ் பாண்டியன், மாவட்ட சுகாதார அலுவலர்களின் நேர்முக உதவியாளர்கள் கோவில்பட்டி பெரியசாமி, தூத்துக்குடி மதுரம் பிரைட்டன், சுகாதாரத்துறை அலுவலர்கள் முருகராஜ், செல்லையா, காளிமுத்து, தேவசுந்தரம், ராஜலட்சுமி, சிட்டு மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post வட்டார மருத்துவ அலுவலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Ottapidaram ,Thangamani ,Medical ,Ottanantham ,Maniachi ,Ottanantham Government Primary Health Center ,Dinakaran ,
× RELATED மதுபோதையில் தொழிலாளி தற்கொலை