×
Saravana Stores

கடற்படை புதிய தளபதியாக தினேஷ் குமார் பதவியேற்பு


புதுடெல்லி: கடற்படை புதிய தளபதியாக அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி பொறுப்பேற்றுள்ளார். கடற்படை தளபதி ஹரிகுமார் பணியில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, 26வது கடற்படை தளபதியாக அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். ரேவா சைனிக் பள்ளியின் முன்னாள் மாணவரான அட்மிரல் திரிபாதி, இதற்கு முன் கடற்படை பணியாளர் பிரிவு துணைத் தலைவராக பதவி வகித்தவர். தகவல் தொடர்பு மற்றும் மின்னணு போர் நிபுணரான திரிபாதி, 1985ல் கடற்படையில் சேர்ந்து 39 ஆண்டுகளாக பல்வேறு சேவைகளை புரிந்துள்ளார்.

மேற்கு கடற்படை கமாண்ட் அதிகாரியாகவும், கடற்படை போர் கப்பல்களான வினாஷ், கிர்ச் மற்றும் திரிசூல் ஆகியவற்றுக்கு தலைமை தாங்கியுள்ளார். கடற்படை புதிய தளபதியாக பதவியேற்ற பின் அட்மிரல் திரிபாதி அளித்த பேட்டியில், ‘‘புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கும், தேசிய வளர்ச்சியின் முக்கிய தூணாக மாறுவதற்கும், வளர்ச்சி அடைந்த இந்தியா எனும் தொலைநோக்கு பார்வையை நோக்கிய தற்சார்பை அடைவதற்குமான இந்திய கடற்படையின் தொடர் முயற்சிகளை வலுப்படுத்துவேன்’’ என்றார்.

The post கடற்படை புதிய தளபதியாக தினேஷ் குமார் பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Dinesh Kumar ,Commander ,Navy ,New Delhi ,Admiral ,Dinesh Kumar Tripathi ,Chief of the Navy ,Harikumar ,Reva Sainik School ,Dinakaran ,
× RELATED மதுரையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: ஆணையர்