- கள்ளக்குறிச்சி
- ஸ்மிருதி
- ராமலிங்கம்
- பெரியநெசலூர், கடலூர் மாவட்டம்
- 2
- கன்னியாமூர் தனியார் பள்ளி
- சின்னசேலம், கள்ளக்குறிச்சி மாவட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி(17), கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி பள்ளி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியர்கள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர்.
இதில், ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகிய இரண்டு பேரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் இருந்து சிபிசிஐடி போலீசார் நீக்கி இருந்தனர். இதற்கு ஆட்சேபனை தெரிவிக்க மாணவியின் தாய் செல்வி அவகாசம் கேட்டிருந்தார். இந்த வழக்கு இரண்டாவது முறையாக கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை மே 14ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டார். அன்றைய தினமே கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகிய மூன்று பேர்களும் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
The post கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரண வழக்கு தனியார் பள்ளி தாளாளர், செயலாளர் உள்பட 3 பேர் ஆஜராக உத்தரவு: மே 14ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.