- கண்ணைய்யா
- ஜனாதிபதி
- அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு
- சென்னை
- தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன்
- தெற்கு ரயில்வே
- கண்ணையா
- அகில இந்திய ரயில்வே…
- தின மலர்
சென்னை: தெற்கு ரயில்வேயில் செயல்படும், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் 2007 மற்றும் 2013ல் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் வெற்றி பெற்று அங்கீகரிக்கப்பட்ட ஒரே தொழிற்சங்கமாக, தெற்கு ரயில்வேயில் இயங்கி வருகிறது. அதன் பொதுச்செயலாளராக கண்ணையா உள்ளார். அகில இந்திய ரயில்வே சம்மேளனம் என்பது கொங்கண் ரயில்வே உள்பட 19 ரயில்வேக்களையும், ஐசிஎப் உள்ளிட்ட 7 உற்பத்தி கேந்திரங்களையும் உள்ளடக்கியது.
12 லட்சம் ரயில்வே தொழிலாளர்களின் ஆதரவு பெற்ற, அங்கீகரிக்கப்பட்ட சம்மேளனமாக இது உள்ளது. அகில இந்திய ரயில்வே சம்மேளனம் 1923ல் துவங்கப்பட்டு, 100 ஆண்டு காலத்தை கடந்து, 101வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. பொது மகா சபை மற்றும் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள், கடந்த 23 முதல் 25ம் தேதி வரை நடைபெற்றது. அதில் 5வது முறையாக அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவராக கண்ணையா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
The post அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவராக 5வது முறையாக கண்ணையா தேர்வு appeared first on Dinakaran.