×
Saravana Stores

மோடி, அமித்ஷா முடிவெடுத்து விட்டனர்; பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பை தூக்கி எறியும்: ராகுல் காந்தி பிரசாரம்


பிந்த்: மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கையில் அரசியலமைப்பு புத்தகத்துடன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: தற்போதைய மக்களவைத் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான யுத்தம். ஏழைகள், பழங்குடியினர், ஓபிசி பிரிவினர் பல உரிமைகளை பெற்றதற்கு காரணம் அரசியலமைப்பு சட்டம் தான். அரசியலமைப்பு தான் நமக்கு 100 நாள் வேலை திட்டம், நில உரிமைகள், இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்தையும் தந்துள்ளது. ஆனால் பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்த அரசியலமைப்பு சட்டத்தை கிழித்து தூக்கி எறிந்து விடும்.

இதை பிரதமர் மோடி, அமித்ஷா ஏற்கனவே முடிவு செய்து விட்டனர். அவர்கள் வெறும் 20 கோடீஸ்வரர்களுக்காக மட்டுமே நாட்டை நடத்த விரும்புகிறார்கள். பாஜ இடஒதுக்கீட்டிற்கு எதிரானது இல்லை என்றால், பொதுத்துறை நிறுவனங்கள், ரயில்வே மற்றும் பிற துறைகளை தனியார்மயமாக்குவது ஏன்? காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு மாதம் ரூ.8,500 என ஆண்டிற்கு ரூ.1 லட்சத்தை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்துவோம். பிரதமர் மோடியால் 20 அல்லது 25 தொழிலதிபர்களை தான் கோடீஸ்வரர்களாக ஆக்க முடியும் என்றால், காங்கிரசால் கோடிக்கணக்கான பெண்களை லட்சாதிபதி ஆக மாற்ற முடியும் என்றார்.

The post மோடி, அமித்ஷா முடிவெடுத்து விட்டனர்; பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பை தூக்கி எறியும்: ராகுல் காந்தி பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Amit Shah ,BJP ,Rahul Gandhi ,Bind ,Congress ,president ,Bind district ,Madhya Pradesh ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கடினமாக...