×

மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ச.அருண்ராஜ் விடுத்துள்ள அறிக்கை: மே தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் மூடப்பட வேண்டும். அன்று அரசு விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசால் உலர் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 01.05.2024 (இன்று) மே தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று டாஸ்மாக் கடைகள், மதுபானக் கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்ட விரோதமாக இதர வழிகளில் விற்பனை செய்தாலோ உரிய சட்ட விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட தகவலை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

The post மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Tasmac ,May Day ,Chengalpattu ,District ,Collector ,S. Arunraj ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு பேருந்து நிலையம்...