ஒட்டாவா: கனடாவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் வாரத்திற்கு 24மணி நேரம் பணி செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.கனடாவில் கல்வி கற்பதற்காக வரும் இந்திய மாணவர்கள் உட்பட வெளிநாட்டு மாணவர்களில் பெரும்பாலானோர் அங்கு பகுதி நேர வேலை செய்வார்கள். இதன் மூலம் வரும் வருவாயை அவர்கள் தங்களது செலவுக்கு பயன்படுத்திக்கொள்வார்கள்.
சர்வதேச மாணவர்கள் வாரம் ஒன்றுக்கு 20 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்வதற்கு அனுமதிக்கப்படும் தற்காலிக கொள்கை நேற்று முடிவுக்கு வந்தது. இது மேலும் நீடிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குடியுரிமை அமைச்சர் மார்க் மில்லர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ வருகின்ற செப்டம்பர் முதல் வெளிநாட்டு மாணவர்கள் பணியாற்றும் நேரத்தை வாரத்திற்கு 24 நேரமாக மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post கனடாவில் வெளிநாட்டு மாணவர்கள் வாரத்திற்கு 24 மணி நேரம் பணி செய்ய அனுமதி appeared first on Dinakaran.