×

சென்னையில் இன்று கிங்ஸ் மோதல்

சென்னை: ஐபிஎல் டி20 தொடரின் 49வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் சென்னையில் இன்று மோதுகின்றன. இரு அணிகளும் தலா 9 லீக் ஆட்டங்களில் விளையாடி உள்ள நிலையில், சிஎஸ்கே 2 வெற்றி, 2 தோல்வி என மாறி மாறி சந்தித்து வருகிறது. அதனடிப்படையில், இன்று வெற்றிக்கான வாய்ப்பில் பஞ்சாப்பை எதிர்கொள்கிறது. முதல் 2 ஆட்டங்களில் பெங்களூரு, குஜராத்துக்கு எதிராக வெற்றி, அடுத்து டெல்லி, ஐதரபாத்திடம் தோல்வி, பிறகு கொல்கத்தா, மும்பையை வீழ்த்திய சிஎஸ்கே தொடர்ந்து நடந்த 2 ஆட்டங்களிலும் லக்னோவிடம் தோல்வியைத் தழுவியது. கடைசியாக நடந்த ஆட்டத்தில் ஐதராபாத்துக்கு எதிராக அபாரமாக வென்றது.

அதே உற்சாகத்துடன் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்த சென்னை வரிந்துகட்டுகிறது. அதே சமயம், சாம் கரன் தலைமையிலான பஞ்சாப் 9 ஆட்டங்களில் 3 வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. அதிலும், கொல்கத்தாவுடன் மோதிய 2வது ஆட்டத்தில் ஐபிஎல் மட்டுமின்றி டி20 வரலாற்றில் அதிகபட்ச இலக்கை விரட்டி வென்ற அணியாக சாதனை படைத்தது. அந்த வெற்றி கொடுத்த உத்வேகத்துடன் சூப்பர் கிங்சை பந்தாட முனைகிறது பஞ்சாப். அடுத்த ஆட்டத்திலும் இதே அணிகளே மீண்டும் மோத உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாப் அணியை சென்னை வீழ்த்தியதில்லை என்ற வரலாற்றை ருதுராஜ் & கோ மாற்றி எழுதுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

The post சென்னையில் இன்று கிங்ஸ் மோதல் appeared first on Dinakaran.

Tags : Kings ,Chennai ,IPL T20 ,Chennai Super Kings ,Punjab Kings ,Dinakaran ,
× RELATED அடித்து பெய்யும் மழை! மிதக்கும் மும்பை